Welcome Ikman.news
 
 
 

මුල් පිටුව

පුවත්

ගොසිප්

විදෙස් පුවත්

ක්‍රීඩා

සේයාරූ

වීඩියෝ

 

செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு ஹட்டன் நீதிமன்றம் பிடியாணை

|Tue,1st March 2016|Security| Page Views : 25

අලුත් පුවත්
දෝනිගේ වැරදි විතරක් රෙකෝඩ් වෙන කඩුල්ලේ ඇති ගුප්ත මයික්‍රෆෝනය
රගපෑමෙන් ඉවත්වෙලා ගයත්‍රී කරපු දේවල්
පක්‍ෂයේ ජයග්‍රහණයට කටයුතු නොකරන සංවිධායකයන් ඉවත් කරනවා
නොරොච්චෝලේ යළි වැඩ අරඹයි
 
இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் சிசேஷ்ட உப தலைவரும், முன்னாள் அமைசச்ர் ஆறுமுகன் தொண்டமானின் சகோதரருமான ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக ஹட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு மொழிகள் மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய அமைச்சர் பழனி திகாம்பரத்தின் வாகனத்தை ஹட்டன் நகரில் வழிமறித்து இடையூறு விளைவித்தமை தொடர்பாக செந்தில் தொண்டமானுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாட்டை ஏற்ற ஹட்டன் பொலிஸார் ஹட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இதில் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உட்பட ஊவா மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எம்.ராம், எஸ்.சக்திவேல், எம்.ரமேஸ், எம்.உதயகுமார் ஆகியோரும் இந்த முறைப்பாட்டில் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதன்படி இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றபோது அமைச்சர் செந்தில் தொண்டமான் சுகயீனம் காரணமாக மன்றில் சமூகமளிக்கவில்லை என்று அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி எஸ்.ராம் மூர்த்தி தெரிவித்ததோடு, அதற்கான மருத்துவ அறிக்கையையும் சமர்ப்பித்தார்.

எனினும் அந்த மருத்துவ அறிக்கையை நிராகரித்த ஹட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதவான் பிரசாத் லியனகே, இந்த வழக்கு விசாரணைகளின்போது செந்தில் தொண்டமான் முன்னிலையாக தவறியதால் அவரை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு பிடியாணையை பிறப்பித்தார்.

இதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதிவரை இந்த வழக்கு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

www
  www.ikman.news  සොයා යෑම
 
   

මුල් පිටුව

පුවත්

ගොසිප්

විදෙස් පුවත්

ක්‍රීඩා

සේයාරූ

වීඩියෝ


 

    ikman.news  අමතන්න  
  Copyright 2015  බාහිර වෙබ් අඩවි වලින් ගනු ලබන තොරතුරු වල සත්‍යතාවය පිලිබදව අප වගකීම් නොදරන බව කාරුණිකව සලකන්න